கால்டுவெல் சிலைக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

கால்டுவெல் சிலைக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு மரியாதை

வள்ளியூர், மே 9 - திருநெல்வேலி மாவட் டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி யில் தமிழறிஞர் பேராயர் ராபர்ட் கால்டு வெல்லின் 209-ஆவது பிறந்த நாளை யொட்டி, 7.5.2023 அன்று அவரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் 

மு.அப்பாவு கூறியதாவது:

தமிழ்நாடு அரசு தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் பிறந்த நாள், நினைவு நாள் களில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி வருகிறது.

இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை மேனாள் முதல மைச்சர் கலைஞர் 2011-இல் நினைவு இல்லமாக அறிவித்தார்.

அதைத் தொடர்த்து, கால்டுவெல் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நினைவு இல்லத்தை  பழைமை மாறாமல் புதுப்பிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, ரூ. 2.06 கோடி யில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment