தமிழ்நாடு முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடுவது நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

தமிழ்நாடு முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடுவது நிறுத்தம்

சென்னை, மே 9 - கேரள மாநில பெண்களை மய்யமாக வைத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப் படம் தயாரிக்கப்பட் டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண் கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் அய்.எஸ்.அய்.எஸ். தீவிர வாத இயக்கத்தில் சேர்வது போன்று கதைக் களம் உருவாக் கப்பட்டுள்ளது.

இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறு வனம் முடிவு செய்தது. இதற்கு தமிழ் நாட்டிலும்  எதிர்ப்பு ஏற்பட் டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய் யப்பட்டன. இதையடுத்து திட்டமிட்டபடி 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது. சென்னையில் 13 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டது. சென்னை அண்ணா நகர் வி.ஆர். மால், ராயப் பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம் பாக்கம் அய்நாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்த மால் - திரையரங்குகளிலும்  'தி கேரளா ஸ்டோரி' படம் வெளி யானது. இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 7.5.2023 அன்று முதல் திரையிடப் படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் 7.5.2023 அன்று முதல் திரையிடப்படாது என அறி விக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச் சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாத தால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment