உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் அரசு மருத்துவமனையில் 4 நாளில் 57 பேர் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் அரசு மருத்துவமனையில் 4 நாளில் 57 பேர் மரணம்

லக்னோ, ஜூன் 19- உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 15-ஆம்  தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அது வும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப் பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ கண்காணிப் பாளர் டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.

காய்ச்சல்- பிற நோய்கள்

உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "மருத்துவமனையின் பதிவேடு கள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட் டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.

இதேபோன்று அந்த மருத்துவ மனையின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த மருத்துவமனையில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோ யாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த மருத்துவமனை நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15ஆம் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள னர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந் துள்ளனர். 16ஆம் தேதி 20 பேர் இறந்திருக்கி றார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட் டவர்கள் ஆவார்கள்" என்றார்.

சுகாதாரத்துறை குழு ஆய்வு

பிரச்சினைக்குரிய மருத்துவ மனையில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத் துறை குழு அனுப்பி வைக்கப்படு வதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந் துள்ள இறப்புகளுக்கான கார ணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் நோயாளிகள் சிரமப் படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப் பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட் டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் தகவல்

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் கூறியதாவது:-

வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற் காகத்தான் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண் டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக் கும், தலைமை மருத்துவ கண் காணிப்பாளர்களுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment