ராமேசுவரம்,ஜூன்20- கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தடைக்காலம் முடிந்து கடந்த 15 ஆம் தேதி மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.நேற்று (19.6.2023) ராமேஸ்வரத்தை சேர்ந்த 500 படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீனவர்கள் இலங்கைக்கு அருகில் உள்ள நெடுந்தீவு பகுதியில் தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோனி என்ப வருக்கு சொந்தமான படகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்துள்ளனர். அப்பொழுது படகில் பழுது ஏற்பட்டு பாறையில் சிக்கியுள்ளது. இந்தநிலையில் அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம் எல்லை தாண்டி சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்ததாக கூறி ராமேஸ் வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment