ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற முதலமைச்சரின் பேச்சு அமித்ஷாவிற்கு பீதியைக் கிளப்பி விட்டது: பீட்டர் அல்போன்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற முதலமைச்சரின் பேச்சு அமித்ஷாவிற்கு பீதியைக் கிளப்பி விட்டது: பீட்டர் அல்போன்சு

சென்னை, ஜூன் 14 - ஒன்றிய பாஜக அரசை அகற்ற இந்திய அளவில் அனைத்துக்கட்சியையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சரைக் கண்டு பாஜக பயந்துவிட் டது, அந்த பீதியால் தான் அமித்ஷா அமலாக்கத் துறையை ஏவிவிட்டுள் ளார் என்று பீட்டர் அல் போன்ற கூறியுள்ளார் 

தமிழ்நாடு மின்சா ரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ அரசு இல்லம், அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு அடிப்படையான கார ணம் வேண்டும். இந்த ஒரு மாத காலத்தில் நீங் கள் சோதனை நடத்தி எதாவது கிடைத்திருந் தால் இந்த சோதனையை சரி என்று சொல்லலாம். தி.மு.க.வும், அதன் தலை வரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று சொல்லி வருகின்றனர்.

எனவே அவரையும், அவரது ஆட்சியையும் பயமுறுத்துவதற்காக இந்த சோதனையை நடத் துகிறீர்களா? மு.க.ஸ்டா லினின் பெயரே சோவி யத் ரசியாவின் அதிபரின் பெயர்.. எதற்கும் அஞ்சாத, கலங்காத பெயர். அவருடைய பேராண் மையை நீங்கள் ஆட்டிப் படைக்க வேண்டும், அசைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டில் இருக்கிற ஒன் றிய அமைச்சர் மீது ஏதே னும் புகார்கள் வந்து, அதன் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை, உளவுத்துறை டில்லியில் இருக்கிற அமைச்சரின் அறையில் சோதனை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? இது கூட்டாட்சித் தத்து வம் உள்ள நாடு. உங்க ளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் முதலமைச்சரி டமே நேரடியாக பேசி, அவரை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள். பதவியில் இருந்து நீக்குங் கள் என்று எந்தவொரு ஆலோசனைகளை சொல்லவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. எந்த தவறு நடந்தாலும் பார்த் துக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்கள் அமைச்சரவை யில் இதுபோன்ற தவறு கள் நடக்கிறது என்று முதலமைச்சரிடம் சொல் லலாம். அவர் விசாரிப்ப தற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக இருக்கிறார். ஆனால் மாநில அரசின் அதிகாரத் தில் தலையிடுவதும், அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க நினைப்பதும் மிகப் பெரிய தவறு என்று தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் கூறிக்கொள்கி றேன். நான் தேவைப்பட் டால் தமிழ்நாடு முதல மைச்சருக்கு ஒரு ஆலோ சனையை வழங்குவேன். இந்த நிலை தொடர்ந் தால் பொதுவெளிக்கு வந்து ஒன்றிய அரசை கண்டித்து உண்ணா நிலை இருங்கள். தமிழ் நாடு மக்கள் உங்களோடு இருப்பார்கள். ஏனென் றால் எந்த சர்வாதிகாரத் தையும் ஏற்றுக்கொள்ள கூடாது. தமிழர்களின் பாரம்பரியம், தொன்மை, நாகரிகம் என்பது அடி பணிவது கிடையாது. நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுவோம். சட் டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள் வோம். ஆனால் அடி பணிய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எச் சரிக்கையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் காட்சிப் பதிவில் பேசி உள்ளார்.

No comments:

Post a Comment