அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஜூன் 14 - தமிழ் நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந் தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. ஒன்றிய ரிசர்வ் படை பாதுகாப்பு டன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச் சர் செந்தில் பாலாஜி வீட் டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இந்த நிலையில் நுங் கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப் பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனு மதிக்கப்பட்டுள்ள ஒமந் தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்து வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோ ரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், " அமைச் சர் செந்தில் பாலாஜி நல மாக இருக்கிறார். இது பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட் டல், மிரட்டல்களுக்கு திமுக அரசு அஞ்சாது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு களை சட்டப்படி சந்திப் போம்" என்று அவர் கூறினார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவ ரது அறையில் சோதனை நிறைவடைந்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகார்கள் சோதனையில் ஈடுபட்ட னர். தலைமைச் செயல கத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட தாக தகவல் வெளியாகி யுள்ளன. 

No comments:

Post a Comment