குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் தலைமையில் 16.6.2023 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. ஒன்றிய திராவிடர் கழக தலைவர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலை வகித்தனர். "காவிய தலைவர் கலைஞர்" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கலைஞரின் ஆளுமையை, பன்முகத் திறனை நிர்வாக மேலாண்மையை பொற்கால ஆட்சி தந்த சிறப்புகளைக் குறித்து சிறப்புரையாற்றினார். கவிஞர் விடுதலை "காவியத்தலைவர் கலைஞர்" எனும் தலைப்பில் பேசினார். புலவர் ராவணன் "கலைஞரின் சங்கத்தமிழ்" பற்றி பேசினார். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள், கலைச்செல்வி, திராவிட மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், வடலூர் இந்திரஜித், வடலூர் செயலாளர் குணசேகரன், கடலூர் மாதவன், திராவிடன், இந்திரா நகர் கிளை தலைவர் பாஸ்கர் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment