எல்லாவற்றிலும் அரசியல் தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

எல்லாவற்றிலும் அரசியல் தானா?

சென்னை கிண்டி  மருத்துவமனை திறப்பு விழா ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குடியரசுத் தலைவர்  வருகை ரத்து

சென்னை, ஜூன் 13 -  சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு குடியரசுத் தலைவர் தேதி தர வில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக மொத்தம் 4.89 ஏக்கர் நிலப் பரப் பில் தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந் துள்ளன.கடந்த 5-ஆம் தேதியே அந்த மருத்துவமனையை குடிய ரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. 

திட்டமிட்ட தேதியில் குடியர சுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் தேதியைப் பெற்று வரும் 15-ஆம் தேதி மருத்துவமனை யைத் திறக்க தமிழ்நாடு அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

ஆனால் குடியரசுத் தலைவர் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் வராததால் அந்த மருத்துவ மனையை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைக்கவுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிண்டி மருத்துவமனை ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ளது. ரூ.146 கோடியில் மருத்துவ உபக ரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவமனை திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவரிடம் தேதி கேட்கப்பட்டது. அவரும் வருவதாக தெரிவித்தார். 

ஆனால், இப்போது எந்த பதிலும் இல்லை. தயார் நிலையில் உள்ள மருத்துவ மனையை நீண்ட நாள்களாக திறக்காமல் இருப்பது சரியாக இருக்காது. அதனால், வரும் 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார்” என்றார் அவர்.

No comments:

Post a Comment