மக்களை நம்பியுள்ள எங்களுக்கு ஒருபோதும் பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

மக்களை நம்பியுள்ள எங்களுக்கு ஒருபோதும் பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் பேச்சு!

திருமலை, ஜூன் 14- சமூக நீதிக் கும் அநீதிக்கும் போர் நடக்க உள்ளது. மக்களை நம்பியுள்ள எங்களுக்கு பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதி லடி கொடுத்து பேசினார். 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆந்திர மாநிலம் விசா கப்பட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ‘ஆந்தி ராவில் ஜெகன் மோகன் அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் மட்டுமே செய்துள்ளது’ என குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யாருடைய கூட்டணியும் எனக்கு தேவையில்லை என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் நேற்று (13.6.2023)பள்ளிகளில் இந்த கல்வியாண் டிற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் ஜெகன் மோகன் விழாவில், தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகர ணங்களை வழங்கி பேசியதா வது: - ஏழைகள் முன்னே றக் கூடாது என்ற எண்ணம் எப் போதும் சந்திரபாபுவிடம் உள் ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் சந்திர பாபுவின் பெயரை சொன்னால் அவர் செய்த ஒரு நல்ல பணியும் நினைவுக்கு வராது. தெலுங்கு தேசம் கட்சி கடையை மூட தயாராக உள் ளது. சமூக நீதிக்கும் அநீதிக்கும் போர் நடக்க உள்ளது. ஒவ் வொரு வீட்டிற்கும் இந்த அரசு கொண்டு வந்த திட் டத்தால் பலன் கிடைத்துள்ளதை அறிந்து, இந்த அரசுக்கு போர் வீரர்களாக மாற வேண்டும். ஜெகனை பா.ஜ.க. ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால், ஜெகன் யாரையும் நம்ப வில்லை. மக்க ளின் நம்பிக்கையை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். தவறான பிரச்சாரங்களை யாரும் நம்ப வேண்டாம். -இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment