மாணவர் இயக்கங்களின் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

மாணவர் இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள் செயலாளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை  நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந் தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,

மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒன்றிய அரசே நடத்த முயற்சிப்பதைக் கண்டித்தும்  ஜூன் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை முன்பாக “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு” (Federation of Students Organisation - Tamil Nadu) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைப் பெருந்திரளாக பங்கேற்கச் செய்யக் கேட்டுக் கொள்கிறோம்.

- ச. பிரின்சு என்னாரெசு பெரியார் 

துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

இரா.செந்தூர பாண்டியன்

மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

தொடர்புக்கு : 9444210999, 8754365832.

No comments:

Post a Comment