வள்ளலாரை பற்றி ஆளுநரின் திரிபு வாதம் - இரா. முத்தரசன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

வள்ளலாரை பற்றி ஆளுநரின் திரிபு வாதம் - இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜூன் 24- வள்ளலார் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றைப் பற்றி தவறான கருத் துகளை தொடர்ந்து கூறிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது ஒன்றை உளறிக் கொட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜாதிய சனாதன சமூக கட்டமைப்பை உடைக்கவும், அதன் கருத்தியலை தாக்கி அழிக் கவும் ஒலித்த முதன்மைக்குரல் “வள்ளலார்” குரல் ஆகும். “ஜாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி, என்றும் ஜாதியும், மதமும் சமயமும் வேண்டேன் சாத்திரக் குப்பையும் வேண்டேன்” எனவும் “மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்” எனவும் முழங் கியவர்.

“அருட் பெருஞ் சோதி, தனிப் பெருங் கருணை” என தமிழ் நாட்டில் ஆன்மிகத்தில் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் உள்ள டக்கிய புதிய தடம் பதித்தவர்.


“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்” என அனைத்துயிர்களின் சமத்துவம் பேசியவர். இத்தனை சிறப்புக் கொண்ட வள்ளலாரை “பார்ப் பனிய, ஜாதியத்தை உயர்த்தி பிடிக் கும் சனாதனத்தின் உச்சம்” என தமிழ்நாடு ஆளுநர் கூறியதை என்ன வென்று சொல்வது? திட்டமிட்டு இப்படி பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது." என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment