ராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

ராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ராமேசுவரம், ஜூன் 12 ராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ராமேசுவரம் தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணியின் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ப.க.  பொதுச் செயலாளர் வீ.மோகன் தலைமை தாங்கினார் 

தலைமை கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி,  மாவட்ட கழகத் தலைவர் முருகேசன், பொன்னமராவதி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ப.க. அமைப்பாளராக தங்கச்சிமடம் எஸ்.பேரின்பம் நியமிக்கப்பட்டார். 

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தங்கச்சி மடம் ராஜ்குமார், ஓலைகுடா கெவின்குமார்,  எஸ்.அறிவுச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment