பாட்னாவில் தமிழர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

பாட்னாவில் தமிழர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பாட்னா, ஜூன் 24- எதிர்க் கட்சித் தலைவர்கள் பாட்னா வில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி னார்.  பாட்னா தமிழ்ச் சங்கத் தலைவர் என்.சரவணகுமார் அய்ஏஎஸ், செயலாளர் மகா தேவன் தலைமையில் 20 தமிழர் கள் முதலமைச்சரைச் சந்தித் தனர். இவர்களில், அய்ஏஎஸ் அதிகாரிகளான கே.செந்தில் குமார், தியாகராஜன், சஜ்ஜன், மூத்த அய்பிஎஸ் அதிகாரிகள் ரவீந்திரன் சங்கரன், அவரது மனைவி  மலர்விழி, அய்எப்எஸ் அதிகாரி கணேஷ்குமார் உள் ளிட்டோரும் இடம் பெற்றி ருந்தனர்.

தனித்தனியே அனைவரை யும் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்.சரவணகுமார், “பீகாரில் தமிழர்கள் எண் ணிக்கை குறித்தும் அவர்களது குழந்தைகள் தமிழ் பயில்கிறார் களா என்றும் முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். 

தமிழ் கற்றுத் தரத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உதவத்  தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது” எனக் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment