கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க சித்தராமையா தலைமையிலான கருநாடக அரசு முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉டில்லி நேரு அருங்காட்சியகம், பிரதமர் அருங் காட்சியகம் என பெயர் மாற்றம், மோடி அரசு முடிவு.

👉2024 தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வில்லை என்றால் அடுத்த முறை தேர்தல் வராமல் போகலாம் என ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் எச்சரிக்கை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉இனி லுங்கிகள், நைட்டிகள் அணியக் கூடாது என்ற நொய்டா சொசைட்டியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு.

👉பாடப்புத்தகங்களில் வரலாற்றை மாற்றும் என்.இசி.ஆர்.டி. முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா, அய்தராபாத், ஜேஎன்யு மற்றும் டில்லி பல்கலைக்கழகம் உட்பட முப்பத்து மூன்று பிரபல கல்வியாளர்கள், தங்கள் "கூட்டு ஆக்கப்பூர்வமான முயற்சி ஆபத்தில் உள்ளது" என்பதால் பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி.க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தி இந்து:

👉ஒன்றிய ஓபிசி பட்டியலில் மேலும் 80 ஜாதிகள் சேர்க்கப்பட ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ் ராஜ் அறிவிப்பு.

👉அய்க்கிய குகி விடுதலை முன்னணியின் (யுகேஎல்எஃப்) தலைவர் எஸ்.எஸ்.ஹோகிப், அவரது அமைப்பும் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து தேர்தல்களில் வெற்றி பெற உதவியதாக வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அசாம் முதலமைச்சர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ராம் மகாதேவ் ஆகியோரை  தேசிய புலனாய்வு முகமை (என்.அய்.ஏ) விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

👉பொது சிவில் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண் டும் என்ற மோடி அரசின் தற்போதைய நடவடிக்கை, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கான பாஜகவின் செயல்பாடு என திர்ணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிரெக் ஓ பிரைய்ன் கருத்து.

தி டெலிகிராப்:

👉கிழக்கு லடாக்கில் பழைய நிலையை மீட்டெடுப்பதில் நரேந்திர மோடி அரசாங்கம் தொடர்ந்து மவுனம் கடைப் பிடிப்பதன் காரணமாக, கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் சீனத் துருப்புக்களுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மேனாள், ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.

👉கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் 2.7 லட்சம்  வேலைகள் குறைந்துவிட்டன என மோடி அரசின் 2012-2013 முதல் 2021-2022 வரையிலான பொது நிறுவன ஆய்வு அறிக்கைகள் தகவல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஆறு பேர் விரைவில் ஓய்வு பெற உள்ளனர்.

👉கடந்த பாஜக அரசில் சேர்க்கப்பட்ட எட்கேவார், சாவர்க்கர் பற்றிய அத்தியாயங்களை பள்ளிப் புத்தகங் களில் இருந்து நீக்க சித்தராமையா தலைமையிலான கருநாடக அமைச்சரவை ஒப்புதல்.

👉 மனுஸ்மிருதி க்குப் பிறகு, கீதையை மேற்கோள் காட்டிய நீதிபதி - விமர்சனங்களாலும், பாராட்டுகளாலும் துவண்டு விடப் போவதில்லை என்கிறார் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் தவே

- குடந்தை கருணா


No comments:

Post a Comment