கும்பகோணம் மாவட்ட (திருநாகேசுவரம்)பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

கும்பகோணம் மாவட்ட (திருநாகேசுவரம்)பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கும்பகோணம், ஜூன் 17- கும்பகோ ணம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திருநாகேசு வரம் ஒப்பிலி ரெசிடென்சி வளாகம் சிற்றரங்கில் இன்று (17.6.2023) காலை 9 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட் டறை சிறப்பாக துவங்கியது.

நிகழ்ச்சிக்கு திருவிடைமரு தூர் ஒன்றிய தலைவர் எம். என். கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் கு. நிம்மதி தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் சு. துரைராஜ்,  மாவட்ட துணைச் செயலாளர்  ஆ.தமிழ்மணி, வழக்குரைஞர் பொதுக்குழு உறுப்பினர் சு. விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி தலை வர் மு திரிபுரசுந்தரி, தஞ்சை மாவட்ட இளைஞர் அணி தலைவர் பேராசிரியர் க.சிவக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தலைமை கழக அமைப் பாளர் குடந்தை க.குருசாமி  பெரியாரியல் வகுப்பு நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார்.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளரும் திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா. ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 காலை 10 மணிக்கு தந்தை பெரியாரின் பெண் உரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் வகுப்பை துவங்கினார். பகல் 11:15 மணி யளவில் அறிவியலும் மூடநம் பிக்கையும் என்னும் தலைப்பில் மருத்துவர் இரா. கவுதமன் பயிற்சி வகுப்பெடுத்தார். மதி யம் 12.30 மணியளவில் "சமூக ஊடகங்களில் நமது பங்கு" என்னும் தலைப்பினில் கல்வி யாளர் மா. அழகிரிசாமி, வி.சி. வில்வம் ஆகியோரும் "சமூக நீதி வரலாறு" என்னும் தலைப் பில் கோ கருணாநிதியும், "கட வுள் மறுப்புத் தத்துவ விளக்கம்" முனைவர் அதிரடி க. அன்பழ கனும்,  மாலை "தந்தை பெரியா ரின் இன்றைய தேவை" என்ற தலைப்பினில் பொதுச் செயலா ளர் முனைவர் துரை. சந்திர சேகரனும், பாடங்கள் எடுத் தார்கள்.

இன்றைய வகுப்பில் 55 இருபால் மாணவர்கள் கலந்து கொண்டார்கள் மாவட்ட மற்றும் உள்ளூர்  கழகத்தின் பொறுப்பாளர்களும் தோழர் களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment