குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் பகுதியில் தோழர்கள் திண்ணை பரப்புரை செய்து வருகின்றனர். தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருடைய நூல்களை பரப்புதல், பொதுமக்களிடம் திராவிடர்கழக கொள்கைகளை எடுத்துக் கூறுதல், கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்த்தல், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு முகாமிற்கு இளைஞர்களை தயார் செய்தல் போன்ற பரப்புரைகளில் தோழர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டதலைவர் உ.சிவதாணு, செயலர் பெரியார் தாஸ், தொழிலாளரணி செயலாளர் ச.ச. கருணாநிதி, தோழர்கள் பா.சு முத்து வைரவன், ம.செல்வராசு, ச.ச.மணிமேகலை, பொன் எழில் அரசன் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment