பெரியார் - வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

பெரியார் - வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

திருவொற்றியூரில் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்

திருவொற்றியூர், ஜூன் 24- நூற்றாண்டு காண்கின்ற அய்ம்பெரும் விழாக்களை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 17.6.2023 அன்று மாலை 6 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் திரு வொற்றியூர் அஜாக்ஸ் பணிமனை அருகில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

குடந்தை ஆ.துரைராவணன் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க, பி.எஸ்.சைலஸ் வரவேற்புரை ஆற்றினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட் டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இராசேந்திரன், காப்பாளர் பெரு.இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சாதனை களை விளக்கி உரையாற்றினார். தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் வாசு.கருணாநிதி சனாதனம் ஆதரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்துப் பேசினார்.

கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், நூற்றாண்டு காண்கின்ற அய்ம்பெரும் விழாக்களை பற்றி கருத்துகளை விளக்கி எழுச்சியாக உரையாற்றினார். 

ஆங்காங்கே இருந்த பொது மக்கள் கருத்துகளை செவிமடுத் தனர். கூட்ட முடிவில் த.கவுதமன் நன்றிகூறினார்.

No comments:

Post a Comment