பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் கல்விக்கு ஆக.14 முதல் கலந்தாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் கல்விக்கு ஆக.14 முதல் கலந்தாய்வு

சென்னை, ஜூலை 30 - பி.எஸ்சி. செவிலியர், பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக.14ஆம்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசு, தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. செவிலியர், பி.ஃபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித் திறன், பேச்சுமற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன.

இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் -2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய வழி யில் 66,696 பேர் விண்ணப்பித் தனர்.

பரிசீலனைக்குப் பின்னர், தகுதி யான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் www.tnhealth.tn.gov.in ñŸÁ‹ www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது.

2023 - 2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 66,696 பேர் விண்ணப்பித்தனர்.

No comments:

Post a Comment