முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 30 - நாடு முழுவ தும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல் கலைக்கழகங்களின் இடங்கள் மற் றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களின் இடங்களுக்கு ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந் தாய்வு குழு (எம்சிசி) இணைய வழியில கலந்தாய்வு நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ, எம்டிஎஸ் படிப்புகளில் 2023_-2024ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  https://mcc.nic.in  என்ற இணையதளத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எஞ்சிய 50 சதவீத இடங்கள், தனியார் மருத் துவக் கல்லூரிகளின் மாநில அரசுக் கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப் பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

எம்டிஎஸ் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல்,  https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net 

ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு ஆக. 5ஆம் தேதி இணைய வழியில் தொடங்க உள்ளது.

No comments:

Post a Comment