மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்கள் நேரில் சந்தித்து வாக்கு மூலம் பெற்ற காவல் துறையினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்கள் நேரில் சந்தித்து வாக்கு மூலம் பெற்ற காவல் துறையினர்

இம்பால், ஜூலை 30 -  வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும் பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின தகுதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 3ஆம் தேதி குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் பெரும் வன் முறை வெடித்தது. 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தில் 160-க்கும் அதிகமான உயிர்கள் பறி போய் உள்ளன.

இந்த சூழலில் குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் சமீபத்தில் வெளிச் சத்துக்கு வந்தது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி நடந்த இந்த சம்ப வத்தின் காட்சிப் பதிவு சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பேர திர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முக்கிய குற்றவாளி உள்பட 7 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை காவல் துறையினர் தேடி வருகின் றனர். இந்த நிலையில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பெண் காவல் துறை அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை காவல் துறையினர் நேற்று பாதிக் கப்பட்ட 2 பெண்களையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்கு மூலத்தை பெற்றனர்.

அந்த 2 பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்ப வத்தை நேரில் கண்ட சாட்சிகளை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் சம்பவம் தொடர் பாக சி.பி.அய். விசாரணைக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள் ளதாக தகவல் வெளியான நிலை யில், மாநில காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை சந் தித்து வாக்கு மூலத்தை பெற்றி ருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சி.பி.அய். 6 வழக்கு களை விசாரித்து வருவதாகவும், ஆனால், இந்த வழக்குகளில் இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை எனவும் சி.பி.அய். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வலியு றுத்தி தலைநகர் இம்பாலில் 28.7.2023 அன்று வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இம்பாலில் உள்ள முக்கிய சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அத்தியா வசிய பொருட்களின் வினியோ கத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில் மணிப்பூரின் மலை மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்று குகி-சோ மகளிர் மன்றம் அமைப்பை சேர்ந்த பெண்கள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment