மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.43 கோடி கடன்: 1,200 பெண்களுக்கு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.43 கோடி கடன்: 1,200 பெண்களுக்கு வழங்கப்பட்டது

சென்னை,ஜூலை30 - பாங்க் ஆஃப் பரோடா சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது 93 குழுக்களைச் சேர்ந்த 1200 பெண் களுக்கு ரூ.8.43 கோடி கடன் வழங் கப்பட்டது.

கடன் முகாமில் வங்கியின் சென்னை மண்டல பொது மேலா ளர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளில் பெண்கள் குழுக் களின் எண்ணிக்கையை இரட்டிப் பாக்குவதில் வங்கியின் குறிப் பிடத்தக்க சாதனையை பெருமையு டன் வெளிப்படுத்தினார்.

வங்கியானது பெண்களை மேம்படுத்தும் பாதையில் விடா முயற்சியுடன் முன்னேறி வருகிறது என்றார். பரோடா வங்கியின் சென்னை புறநகர் வட்டார மேலாளர் லீனா கோஹைன், மெட்ராஸ் சமூக சேவை அமைப் பின் இயக்குநர் எம்.வி.ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். 

வங்கியின் கும்மிடிப்பூண்டி கிளையின் மூத்த கிளை மேலாளர் சிறீகாந்த் அனைவரையும் வரவேற் றார். மெட்ராஸ் சமூக சேவை அமைப்பை சேர்ந்த யேசுராஜ், ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி, சிறீ கலைமகள் வித்யாலயா பள்ளி தலைவர் திரு ஞானம், கேரிடஸ் இந்தியா மாநில அதிகாரி ஜான் ஆரோக்கியராஜ் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.


No comments:

Post a Comment