அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயோ? அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்தியா என்ற சொல் நீக்கப்பட வேண்டுமாம் : கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயோ? அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்தியா என்ற சொல் நீக்கப்பட வேண்டுமாம் : கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி.

புதுடில்லி,ஜூலை30 - இந்தியா என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப் பினர் நரேஷ் பன்சால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக உறுப்பினர் நரேஷ் பன் சால் இதுகுறித்து மாநிலங்கள வையில் 28.7.2023 அன்று மேலும் கூறியதாவது:

பிரிட்டிஷார் பாரதத்தின் பெயரை இந்தியா என்று மாற்றினார்கள். இதனை 1ஆவது பிரிவின் கீழ் அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களாக நம் நாடு பாரத் என்ற பெயரில்தான் அறியப்பட்டு வந் தது. இது, நாட்டின் பண்டைய பெயர் என்பதுடன் பழங்கால சம்ஸ்கிருத நூல்களில் அதற்கான சான்றுகளும் உள்ளன.

இந்தியா என்ற பெயர் காலனித் துவ ராஜ்ஜியத்தால் வழங்கப்பட் டது. இது, இன்றளவும் அடிமைத் தனத்தின் சின்னமாக விளங்கு கிறது. எனவே, இந்தியா என்ற பெயரை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் பிரமதர்  மோடி செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் கால னித்துவத்தின் அனைத்து சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறியது கவனிக்கத்தக்கது. இவ்வாறு பன்சால் தெரிவித்தார்.


No comments:

Post a Comment