மோசடி வழக்கில் குஜராத் மேனாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

மோசடி வழக்கில் குஜராத் மேனாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத், ஜூலை 16- குஜராத் தில், 1996ஆ-ம் ஆண்டு, பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. இவர், 2014ஆ-ம் ஆண்டு, அமுல் பால் பொருட்களை தயாரிக்கும் குஜராத் கூட்டுறவு பால் வாணிப கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். துத்சாகர் பால்பண்ணையின் தலைவராகவும் இருந்தார். 

அப்போது,மராட்டிய மாநிலத் துக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கால்நடை தீவனங் களை அனுப்பி வைத்தார். ஒப்பந் தம் விடாமலும், பால்பண்ணை வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் தன்னிச்சை யாக அவர் அனுப்பி வைத்ததாக மாநில அரசு குற்றம் சாட்டியது.

எனவே, அரசுக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக விபுல் சவுத்ரி உள்பட 15 பேர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு மெசானா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து இரு பதவி களில் இருந்தும் அவர் நீக்கப் பட்டார். இந்த வழக்கு, மெசானா வில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. (13.7.2023) அன்று கூடுதல் தலைமை நீதிபதி ஒய்.ஆர்.அகர்வால் தீர்ப்பு அளித்தார். விபுல் சவுத்ரி உள்பட 15 பேரும் குற்றவாளிகள் என்று கூறிய அவர், அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தர விட்டார்.

No comments:

Post a Comment