புதுடில்லி, ஜூலை 11 சென்னை மெரினா கடற்கரையில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது. இதற்காக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்படுகிறது. இதனால், கடல் வளம் பெரிய அளவில் பாதிக் கப்படும். அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் எந்தக் கடற்கரை பகுதியிலும் எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு, முதலில் தங்களது அதிருப்தியை வெளிப் படுத்தினர். இதில் பொதுமக்கள் எந்த வகையில் பாதிக்கப்படு கின்றனர் உள்ளிட்ட எந்த விபரங் களும் அடங்கவில்லை. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்கமுடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எந்த தடையும் இன்றி பணிகள் நடை பெற உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment