தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்

சென்னை, ஜூலை 11 தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், அவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடு வித்திடத் தேவையான நடவடிக் கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று கோரி, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக் டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (10.7.2023) கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 9-.7.-2023 அன்று இலங்கைக் கடற்படையின ரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் உள்ள மீனவ சமூகத் தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய-இலங்கைக் கடல் எல் லையை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத் தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் கெட்ட வாய்ப்பாக இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக் கடி நிகழ்ந்து வருவது மீனவர்களை யும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீன வர்களை உடனடியாக விடுவிக்க வும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரி மைகள் மற்றும் வாழ்வாதாரங் களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும்.எனவே இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர் பார்க்கிறேன். இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment