அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில் நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில் நூல் வெளியீட்டு விழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும்(#FeTNA) சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில் நடத்திய 36ஆவது ஆண்டு தமிழ் விழாவில் கலைஞர் அறக்கட்ட ளையின் சார்பில் "சாகித்ய அகாடமி" பெற்ற எழுத்தாளர் இமையம் எழுதிய“திருநீறு சாமி” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூலை கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட, பெரியார் பன்னாட்டு அமைப் பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில் அயலக வாரியத்தின் உறுப்பினர் புகழ் காந்தி, கலைஞர் அறக்கட்டளையை சேர்ந்த வாசிங்டன் சிவா, நியூஜெர்ஸி பாலா, டாலாஸ் பாண்டி, டாலஸ் சக்தி, சிகோகோ விஜய், ஹூஸ்டன் கணேஷ், பிரிட்டோ மற்றும் திரளான அமெரிக்கத் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நூல் வெளியீட்டு விழாவில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை மற்றும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment