எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க.வினர் கவலைப்படவேண்டாம்: அகிலேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க.வினர் கவலைப்படவேண்டாம்: அகிலேஷ்

லக்னோ ஜூலை 11- எதிர்வரும் 2024 நாடாளுமன்ற  தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற் றும் நோக்கில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நட வடிக்கைகளை முன்னெ டுத்தார். 

இதனைத் தொடர்ந்து பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள் பட 15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன. நாடாளுமன்ற தேர் தலில் பா.ஜ.க.வை தோற் கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன் றிணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. 

அதேசமயம் அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி களின் பிரதமர் வேட் பாளர் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் இம் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. தற் போது எதிர்க்கட்சிகளின் தலைவர் யார் அல்லது அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தீவிர ஊகங்கள் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சமாஜ் வாடி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சரு மான அகிலேஷ் நேற்று (10.7.2023) செய்தியாளர் களை சந்தித்து பேசினார்.  அப்போது, எதிர்க்கட்சி களின் பிரதமர் வேட்பா ளராக உங்களை கருது கிறீர்களா என்று அகி லேஷ் யாதவிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். 

அதற்கு அகிலேஷ் பதிலளிக்கையில், எதிர்க்கட்சிகள்  பல திறமையான தலைவர் களை கொண்டுள்ளது. கூட்டணியின் முகம் குறித்த முடிவு பின்னர் தீர்மானிக்கப்படும். எங்க ளுக்கு பல முகங்கள் உள் ளன (பிரதமர் பதவிக்கு) நேரம் வரும் போது நாங் கள் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். ஆனால் இது குறித்து பாஜக ஏன் கவலைப்படு கிறது என்று கூறினார்.னர் கவலைப்படவேண்டாம்:  அகிலேஷ்

No comments:

Post a Comment