5000 ஆண்டுகள் பழைமையான தமிழ்நாட்டு இரும்புக் கால நாகரிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

5000 ஆண்டுகள் பழைமையான தமிழ்நாட்டு இரும்புக் கால நாகரிகம்

சிவகளை, ஜூலை 11- தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளையில் நடந்த அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கி.மு. 2500 முதல் கி.மு. 3000 வரை பழைமையானவை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் இலக்னோ, அகமதாபாத் ஆகிய இரு இடங்களில் இருந்த அறிவியல் ஆய்வு நிலையங்க ளுக்கு காலக்கணிப்புக்காக அனுப்பப் பட்டது .  இரண்டு இடங்களிலும் சிவ களையில் கிடைத்த இரும்புப் பொருட் களின் காலம் கி.மு. 2500 - 3000 என காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பழந்தமிழ் மக்களின் இரும்புக் கால நாகரிகம் 5000 ஆண்டுகள் பழைமையானது என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிகம் என்பது கி.மு. 3250 முதல் கி.மு. 1500 வரை எனக் கருதப்படுகிறது. அது செம்புக் கால நாகரிகம். ஆனால் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தமிழ் நாட்டில் இரும் புக் கால நாகரிகம் இருந்துள்ளது என் பது தற்போது உறுதி செய்யப்பட்டுள் ளது. ஆகவே தமிழர் நாகரிகம் சிந்து வெளி நாகரிகத்தை விட ஒரு முன் னேறிய நாகரிகமாகும். தொடர்ந்து நடத்தப்படும் அகழாய்வுகள் பழந் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அதன் சிறப்பை வெளிக்கொண்டு வரும் எனக் கருதலாம். பழந்தமிழ்நாட் டில் தமிழ் மொழிக்கான எழுத்தாகப் பயன்பட்டு வந்த தமிழ்க் குறியீடுகள் 10,000க்கு மேல் கிடைத்துள்ளன. அவற்றில் 8,000 குறியீடுகள் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment