மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் கொடூரம் தாழ்த்தப்பட்ட வாலிபரை தாக்கி காலணியை நக்க வைத்த மின்ஊழியர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் கொடூரம் தாழ்த்தப்பட்ட வாலிபரை தாக்கி காலணியை நக்க வைத்த மின்ஊழியர் கைது

சோன்பத்ரா, ஜூலை 11- மத்திய பிரதேசத் தின் சிதி மாவட்டத்தில் பழங்குடியின வாலிபர் ஒருவர் மீது மற் றொரு பிரிவை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்ப வம் நாடு முழுவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த பர பரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூக வாலிபர் ஒருவரை, மற் றொருவர் தாக்கி காலணியை நக்க வைத்த கொடுமை அரங்கேறி உள்ளது.

அங்குள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர சமர் என்ற தாழ்த்தப்பட்ட சமூக வாலிபர் கடந்த 6-ஆம் தேதி தனது தாய்மாமா வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது அங்கே மின் தடை ஏற்பட்டது. உடனே ராஜேந் திர சமர் அதை சரி செய்ய முயன் றார். அப்போது அங்கே வந்திருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தேஜ்பாலி சிங் படேல், சமர் மீது கடு மையான கோபம் கொண்டு ஜாதியை கூறி பலமாக தாக்கினார். அத்துடன் சமரை கீழே தள்ளி அவரது கையை முறுக்கி மீண்டும் மீண்டும் தாக்கினார். பின்னர் அவரது மார்புப்பகுதியில் ஏறி நின் றதுடன், தனது காலணியையும் நக்க வைத்துக் கொடுமைப்படுத்தி னார். 

இந்த பயங்கர காட்சிகள் அடங்கிய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பை யும் ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்திய மின்வாரிய ஊழியர் தேஜ்பாலி சிங் படேலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் மின்வாரிய பணி யில் இருந்தும் நீக்கப்பட்டு உள் ளார். நாடு முழுவதும் பேரதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பா. ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இது, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவத்துக்கு சிறிதும் குறைவானதல்ல என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜனதா ஆட்சியில் தாழ்த்தப் பட்ட சமூக மக்கள் மனிதர்களா கவே கருதப்படுவது இல்லை என ஆம் ஆத்மி சாடியுள்ளது. இது ஒரு இழிவான செயல் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதைப்போல ராஷ்டிரீய லோக்தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

No comments:

Post a Comment