இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் மாறி செல்லும் வசதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் மாறி செல்லும் வசதி


சென்னை, ஜூலை 4
- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆலந்தூர், பரங்கிமலை, மயிலாப் பூர் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி செல்லும் வசதி அமைய உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3ஆ-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4ஆ-வது வழித் தடத்திலும், மாதவரம் - சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-ஆவது வழித்தடத்திலும் பணிகள் நடை பெறுகின்றன.

 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமையவுள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கள் கூறிய தாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2026ஆ-ம் ஆண்டு முதல் படிப் படியாக பயன் பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, தற்போதுள்ள பேருந்து, ரயில் நிலையங்கள், ஏற்கெனவே இருக் கும் மெட்ரோ ரயில் நிலை யங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்படு கிறது. குறிப்பாக, மாதவரம், கீழ்ப்பாக் கம், மயிலாப் பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வள சரவாக்கம், ஆழ்வார்திருநகர், சிஎம்பிடி, திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில் நிலையங் களில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற் றொரு வழித்தடத்துக்கு மாறி செல் லும் வசதிகள் இருக்கும். மேற்படி வசதிகளுடன் மெட்ரோ ரயில் திட் டப் பணிகள் நடைபெறு கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment