அரசுப் பள்ளிகளில் விநாடி - வினா போட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

அரசுப் பள்ளிகளில் விநாடி - வினா போட்டிகள்

சென்னை, ஜூலை 4- பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

மாணவர்களிடம் நிதிசார் கல் வியறிவு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத் திந்திய அளவில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரைபயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங் கேற்கும் வகையில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 

இந்த விநாடி-வினா போட்டி வட்டார, மாவட்ட, மாநில மற் றும் தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது.

அதில் //www.ncfe.org.in/ எனும் இணையதளத்தில் இடம் பெற் றுள்ள நிதிசார் கல்வி தொடர்பான விவரங்கள், வங்கிகள், பொருளா தாரம் தொடர்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி-20 அமைப்பு உள் ளிட்டவற்றின் அடிப்படையில் வினாக்கள் இடம்பெறும்.

எனவே, இந்தப் போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவில் சிறந்து விளங்கும் தலா ஒரு மாணவன், மாணவி அடங்கிய இரு நபர் குழுவை தேர்வு செய்து, வட்டார அளவிலானப் போட்டிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பரிந்து ரைக்க வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள், இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி களுடன் சேர்ந்து வட்டார அள விலான போட்டிகளை ஜூலை 5ஆ-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

தொடர்ந்து, மாவட்ட அளவி லான போட்டிகள் ஜூலை 10 முதல் 12ஆ-ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு களை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment