உணவகம், தங்கும் விடுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஓய்வுக் கூடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

உணவகம், தங்கும் விடுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஓய்வுக் கூடம்

கட்டட விதியை திருத்தி அரசாணை

சென்னை,ஜூலை4- நகர்ப் புறங் களில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஓட்டுநர் களுக்கு ஓய்வுக்கூடம் அமைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா அரசாணை பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு, வீட்டு வசதித் துறை செயலருக்கு எழுதிய கடிதத் தில், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கார் ஓட்டுநர்கள் தங்குவதற்கான ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். அதற்காக, பெருநகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத் துக்காக திட்ட அனுமதிகோரும் போது, இதுபோன்ற ஓட்டுநர் களுக்கான தங்கும் கூடத்தை அமைக்க வலியுறுத்துவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில், வீட்டு வசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு உள் ளாட்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அர சாணை பிறப்பித்துள்ளார். அந்த அரசாணையில்,

"உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில், கார் ஓட்டுநர்களுக்காக ஒவ்வொரு கார் நிறுத்துமிடத் துக்கும் ஒரு படுக்கை வசதி கொண்ட ஓய்வுக் கூடத்தை ஏற் படுத்த வேண்டும்.

அதில் 8 படுக்கைகளுக்கு தலா ஒரு கழிப்பறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும். இந்த ஓய்வுக் கூடம் ஓட்டலில் இருந்து 250 மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும்" என்று விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment