புதுக்கோட்டை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

புதுக்கோட்டை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக் கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறை இணை இயக்குநரை பணியிடை நீக்கம் செய்தார்.

புதுக்கோட்டையில் இன்று (19.7.2023) நடைபெறவுள்ள பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக நேற்றிரவு (18.7.2023) வருகைதந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  அன்னவாசல் வட்டார அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த வளா கத்தில் தனியார் தொண்டு நிறு வனத்தின் பராமரிப்பில் உள்ள மனநலக் காப்பகத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் மா. சுப்பிர மணியன் கூறியது:

மனநலக் காப்பகம் வெறும் 3 சிறிய அறைகளைக் கொண்டு, சுமார் 59 பெண்களை தங்க வைத்திருக்கும் இடமாக இருந்தது. ஓர் அறையில் 3 பேர்தங்க வைக்கப்படலாம் என்ற நிலையில் 15 பேருக்கும் மேலாக ஒவ்வோர் அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந் தனர். சுகாதாரமும் பேணப்பட வில்லை. உணவும் சரிவர வழங்க வில்லை என அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த இல்லத்தை ஆய்வு செய்திருக்க வேண்டிய ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கே. ராமுவை பணியிடை நீக்கம் செய்யவும், தலைமை மருத்துவ அலுவலர் சரவணனை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட அந்தத் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவனத் துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும். மருத்துவப் பணிகள் இயக்குநர் மற்றும் மனநலத் திட்ட இயக்குநர் ஆகியோர் இரவே புறப்பட்டு புதுக்கோட்டை வருகின்றனர். இங்குள்ள 59 பேரையும் பாதுகாப்பாக அரசு மருத்துவக் கல்லூரியில் தங்க வைக்கவும், மாவட்டத்திலுள்ள இதர காப்பகங்களை ஆய்வு செய்யவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். 

No comments:

Post a Comment