அய்.அய்.டி.யா - அக்ரகாரமா? சைவ உணவுக் கொள்கையை எதிர்த்த மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

அய்.அய்.டி.யா - அக்ரகாரமா? சைவ உணவுக் கொள்கையை எதிர்த்த மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதமாம்!

மும்பை அய்.அய்.டி. அராஜகம்

மும்பை, அக்.5 இறைச்சி சாப்பிடும் மாணவர்கள் தனியாக அமர வேண்டும் என்று கூறி வெளியே மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய அய் அய் டி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 

மும்பையில் உள்ள பவாய் அய்.அய்.டி. விடுதியில் சமீபத்தில் காய்கறி உணவு சாப்பிடும் மாண வர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட சுவரொட்டி சர்ச் சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த சுவரொட்டி கிழிக் கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் அய் அய் டி வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் இறைச்சி உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு என வெளியே மேஜைகள் போடப் பட்டன. மற்ற 6 மேஜைகள் காய்கறி உணவு சாப்பிடும் மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டன.

இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அய்.அய்.டி.. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கேர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:-அய்.அய்.டி. பம்பாய் அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமை தியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அய்.அய்.டி நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப் படவில்லை.

No comments:

Post a Comment