அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை - அக். 14-இல் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை - அக். 14-இல் திறப்பு

வாசிங்டன்,அக்.5- இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திறக்கப் பட உள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆர். அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு சமூக இயக்கங் களை அம்பேத்கர் முன்னின்று நடத்தினார்.

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கா வின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பள வில் கட்டப்பட்டு வரும் அம்பேக்தர் பன்னாட்டு மய்யத்தில் (ஏஅய்சி) ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரி டப்பட்ட 19 அடி முழு உருவ அம் பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அம்பேத்கர் புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நாளான அக்டோபர் 14-ஆம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட உள்ளது. இந்தச் சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார்.  

No comments:

Post a Comment