பா.ஜ.க. கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறிய பி.ஆர்.எஸ். கோரிக்கை நிராகரிப்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

பா.ஜ.க. கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறிய பி.ஆர்.எஸ். கோரிக்கை நிராகரிப்பா?

பிரதமர் மோடிக்கு தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் பதிலடி

நிஜாமாபாத், அக்.5- தெலங்கானா முதலமைச்சரும், பாரத ராட்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினார்; ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

சந்திரசேகர் ராவின் செயல்பாடு களை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்தேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தெலங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிஜாமா பாதில் 3.9.2023 அன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

2020-இல் நடைபெற்ற அய்தரா பாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக டில்லியில் சந்திரசேகர் ராவ் என்னை சந்தித்தார். அழகான சால்வையை அணிவித்து, மரியாதை செய்ததோடு, என்னிடம் அன்பாக வும் பேசினார். ஆனால், அவரது குணம் இதுவல்ல என்பது எனக்குத் தெரியும்.

‘உங்களின் தலைமையில் நாடு வளர்ச்சி கண்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க நாங்கள் விரும்புகிறோம். அய்தரா பாத் மாநகராட்சித் தேர்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும்’ என்று அவர் கோரினார். ஆனால், அவரது செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு, அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியை, ஆளும் பாரத ராட்டிர சமிதி கட்சி கொள்ளையடிக்கிறது. ஊழல்தான், அக்கட்சியின் 'தாரக மந்திரம்' என்றார் பிரதமர் மோடி.

விரைவில் மின்மயமாக்கம்: 

முன்னதாக, நிஜாமாபாதில் ரூ.8,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ‘நாட் டில் அனைத்து ரயில் வழித்தடங்களும் சில மாதங்களில் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் மகன் பதிலடி: 

பாஜக கூட்டணியில் இணைய முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விரும் பியதாக பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு அவரது மகனும், தெலங் கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

‘தேசிய ஜனநாயக கூட்ட ணியைவிட்டு அனைத்து கட்சிகளும் விலகிக் கொண்டிருக்கும் சூழலில், அந்தக் கூட்டணியில் சேர நாங்கள் ஏன் விரும்ப வேண்டும்? தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். இந்த உலகில் தான் மட்டுமே ஊழலற்றவர்; மற்ற அனைவரும் ஊழல்வாதிகள் என பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்றார் கே.டி.ராமராவ்.


No comments:

Post a Comment