சிக்கிம் ஏரி 402 ஏக்கரிலிருந்து 149 ஏக்கராக சுருங்கியது செயற்கைக்கோள் படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

சிக்கிம் ஏரி 402 ஏக்கரிலிருந்து 149 ஏக்கராக சுருங்கியது செயற்கைக்கோள் படம்

பெங்களூரு, அக்.7- மேக வெடிப் பால் தண்ணீர் வெளியேறிசிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரியின் பரப்பளவு 2 மடங்கு குறைந்ததாக இஸ்ரோ தெரிவித் துள்ளது.

கடந்த மாதம் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிப்படங்களில் 402 ஏக்கர் அளவிற்கு இருந்த தெற்குலோநாக் ஏரியின் பரப்பளவு 28ஆம் தேதி 413 ஏக்கர் அளவிற்கு விரிவடைந் துள்ளது. அதைத் தொடர்ந்தே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலை யில், தற்போது ஏரியின் பரப்பளவு 149 ஏக்கராக சுருங்கி உள்ளது. பனிப்பாறைகள் சூழ்ந்த லோனாக் ஏரியால் இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என கடந்த 10 ஆண்டுகளாகவே பல அரசு நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் எச்சரித்து வந்தன.

அதே நேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த சம்பவங்கள் நடந்ததா எனவும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேபாளத்தில் அடுத் தடுத்து 5 நில நடுக்கங்கள் ஏற் பட்டன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக் கத்தின் தாக்கம் தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் உண ரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே சிக்கிம் மாநிலத்தில் லோநாக் ஏரி பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக கனமழை கொட்டத் தொடங்கியது. சில மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக லாசென் பள்ளத் தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சுங்தாங் அணையும் உடைந்தது. மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர்பலியாகி உள்ளனர். 

மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.

No comments:

Post a Comment