ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, அக்.7- ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. 

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரமில்லை, ஒன்றிய அரசின் உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று கூறி மாநிலங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏற் கெனவே தரவுகள்வெளியாகிவிட்டன. இனிமேல் தடை விதிக்க முடியாது. 

மேலும், மாநிலங்களின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்' என்று நீதிபதிகள் கூறி வழக்கை வருகிற ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment