மருத்துவ இயலின் புதிய சாதனை ஆறு முறை இதயத் துடிப்பு நின்ற இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

மருத்துவ இயலின் புதிய சாதனை ஆறு முறை இதயத் துடிப்பு நின்ற இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள்

லண்டன், அக்.7 அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வசித்து வரும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் அதுல் ராவ். இவர் இங்கிலாந்து தலைநகர் லண் டனில் உள்ள ஒரு கல்லூரியில் மருத் துவத்துக்கு முந்தைய பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி கல்லூரியில் இருந்தபோது அதுல்ராவ் திடீரென நிலைகுலைந்து விழுந்தார். இதனை யடுத்து, சக மாணவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவரை மருத்து வர்கள் பரிசோதித்ததில் அவருக்கு நுரையீரலில் ரத்தம் உறைந்து, அத னால் இதயத் துடிப்பு நின்றுபோனது தெரியவந்தது. 

இதையடுத்து, ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை கொடுத்து, அதுல் ராவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்றனர். சிகிச்சையின்போதே மேலும் 5 முறை அதுல் ராவின் இதய துடிப்பு நின்றுபோனது. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. எனினும் மருத்துவர்கள் விடியவிடிய அயராது உழைத்து, அதுல்ராவின் உயிரை காப்பாற்றினர். ஒரே நாளில் 6 முறை இதய துடிப்பு நின்றுபோன போதும் மருத்துவர்களின் அயராத முயற்சியால் அதுல்ராவ் உயிர் பிழைத்தது அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அதுல் ராவ் சமீபத்தில் லண்டன் மருத்துவ மனைக்கு தனது பெற்றோருடன் சென்று, தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது லண்ட னிலேயே தனது மருத்துவ படிப்பை தொடரப் போவதாக அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment