நீண்ட காலமாக சிறையில் இருந்த முஸ்லிம் கைதிகளுக்கு இடைக்கால பிணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

நீண்ட காலமாக சிறையில் இருந்த முஸ்லிம் கைதிகளுக்கு இடைக்கால பிணை

சென்னை, அக். 7-  நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட 49 கைதிகளை நன் னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழ் நாடு அரசு முடிவு எடுத்து அதற் கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்க வில்லை. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும், சிறையில் உள்ள கைதிகள் ஷாகுல் ஹமீது, அஸ் லாம்  உள்ளிட்ட 5 பேருக்கு பிணை கோரி இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ராஜ் திலக் ஆஜ ராகி, “நன்னடத்தை அடிப்படை யில் சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வில்லை. அந்த பரிந்துரை தொடர்ந்து நிலுவையில் உள்ளது” என்றார்.

மேலும், “உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப் படையில் தற்போது பிணை கோரி உள்ள சிறைவாசிகளை விடுவிப் பதற்கான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்ப தால், பிணை வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட் சேபமும் இல்லை” என்றார். 

அதையடுத்து நீதிபதிகள், 5 பேருக் கும் 3 மாத காலத்துக்கு இடைக் கால மாக நிபந்தனை பிணை வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment