வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!

வடக்குத்து, அக். 23 - வடக் குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் 83ஆவது மாதாந்திர நிகழ்ச் சியாக சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்து அரங்கம் 22.10.2023 அன்று மாலை 600 மணி முதல் 8 மணி வரை ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராம நாதன் வரவேற்புரை ஆற்றினார்

சேரன்மாதேவி குருகுல போராட்டத்தின் வரலாற்றை பார்ப்பனர்-தமிழர் எனும் உணர்ச்சி காங்கிரசில் ஏற்படுவ தற்கு காரணமாக அமைந்த போராட்டம் என்பது பற்றி எல்லாம் விளக்க மாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார் மாவட்ட மகளிர் பாசறை பொறுப் பாளர் தமிழேந்தி, திரா விட மணி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், வடலூர் கழக அமைப்பாளர் முருகன், மறுவாய் கழகத் தலைவர் திருநாவுக்கரசு, கவிஞர் தீபக், எழுத்தாளர் அசோக், மாநில இளை ஞர் அணி துணைச் செய லாளர் வேலு ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண் டனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment