உறுப்புக் கொடையாளர்களின் உடல், அரசு மரியாதையோடு அடக்கம் தமிழ்நாடு அரசினைப் பின்பற்றி கேரள அரசும் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

உறுப்புக் கொடையாளர்களின் உடல், அரசு மரியாதையோடு அடக்கம் தமிழ்நாடு அரசினைப் பின்பற்றி கேரள அரசும் முடிவு!

திருவனந்தபுரம், அக். 23 -  தமிழ்நாடு அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்பு களை கொடை செய்பவர்கள் மரணமடைந்தால் அரசு மரியா தையுடன் இறுதி நிகழ்வை நடத்துவது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது.

உடல் உறுப்புகளை கொடை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இதன்படி உடல் உறுப்புகள் கொடை செய்பவர்களின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப் படும் என்று சமீபத்தில் அறிவிக் கப்பட்டது.

தமிழ்நாடு அரசைப் பின் தொடர்ந்து கேரளாவிலும் உடல் உறுப்புகளை கொடை செய்பவர்களின் இறுதி நிகழ்வை அரசு மரியாதையுடன் நடத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அரசி டம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்த பிறகு இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உடல் உறுப் புகளை கொடை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் திரைக் கலைஞர்கள் உள்பட சமூகத்தில் பிரபலமானவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment