ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் முதலிடம்


பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான கூடை பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 11.10.2023 அன்று நடைபெற்றது. 

அதில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாண வர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்கள் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கூடைப் பந்து மற்றும் கைப் பந்து முதலிடத்தையும் 14 வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். 

இதில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment