புதுடில்லி,மே18, கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நோயாளியை அடை யாளங்காட் டும் ஆரோக்யா சேது என்ற ஆப்பில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, மொத்தம் 85,940 கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,752 பேர் இறந்து விட்டனர். இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. சேவ் லைஃப் அறக்கட்டளையின் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், 1,200 சாலை விபத்துக்களில் குறைந்தது 381 பேர் உயிரிழந்துள்ளனர். இது கிட்டத்தட்ட 32விழுக்காடு இறப்பு விகிதமாக உள்ளது. 2019ஆம் ஆண்டில் கூட, 100 சாலை விபத் துக்களுக்கு இறப்பு விகிதம் சுமார் 30 ஆக இருந்தது. மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், மார்ச் 24 முதல் மே 16 வரை நடந்த சாலை விபத்துகளில் 381 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 145 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
No comments:
Post a Comment