நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு பேருந்து போக்குவரத்து பற்றி மாநிலங்களே முடிவு செய்யலாம் : மத்திய அரசின் அறிவிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு பேருந்து போக்குவரத்து பற்றி மாநிலங்களே முடிவு செய்யலாம் : மத்திய அரசின் அறிவிப்புகள்

புதுடில்லி, மே 18 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், “கரோனா வைரஸ் தொற்றை (கோவிட்-19) கட்டுப்படுத்த நாட்டில் மேலும் 14 நாட் களுக்கு ஊரடங்கு நீட்டிக் கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.


இதையொட்டி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜி.வி.வி.சர்மா கூறுகையில், “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் பிரிவு 6 (2) (1) வழங் கியுள்ள அதிகாரத்தின் கீழ், இந்திய அரசின் அமைச்ச கங்கள், துறைகள், மாநில அரசுகள், மாநில அரசு அதிகாரிகள் ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை தொடர் வதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.


இந்த நான்காவது ஊர டங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப் பில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


முக்கியமாக திருமண விழாக்களில் 20 பேர் கலந்து கொள்ளத்தான் இதுவரை அனுமதி இருந்தது. இனி 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்கிற வகை யில் கட்டுப்பாடு தளர்த்தப் பட்டு உள்ளது. அதே நேரத் தில் சமூக இடைவெளி கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்.


மாநிலங்கள் இடையே யான பேருந்து போக்குவரத்து பற்றி சம்மந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு எடுத்து இயக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.


விளையாட்டு வளாகங் கள், மைதானங்களை திறந் திருக்க அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனு மதி கிடையாது.


உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப் பில் இடம்பெற்றுள்ள பிற முக்கிய தடைகள் வருமாறு:-


உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு தடை நீடிக்கிறது. அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் விமான சேவை, உள்துறை அமைச்சக நோக் கங்களுக்கான, பாதுகாப்பு காரணங்களுக்கான விமான சேவை அனுமதிக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில் சேவைக்கு தடை நீடிக்கிறது.


பள்ளிக்கூடங்கள், கல்லூ ரிகள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும். இணைய வழி மற்றும் தொலைதூர கல்வி முறை தொடர அனு மதி உண்டு.


விடுதிகள், உணவு விடுதி களில் அமர்ந்து சாப்பிட தடை தொடருகிறது. ‘பார் சல்’ சேவை மட்டும் அனு மதிக்கப்படுகிறது.


திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மய்யங்கள், நீச்சல் குளங்கள், உல்லாச பூங்காக்கள், நாடக அரங்குகள், மது விடுதிகள், கூட்ட அரங்குகள் ஆகியவற் றுக்கு தடை தொடர்கிறது.


சமூக, அரசியல், விளை யாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத நிகழ்ச்சிகளில் கூடுவதற்கு தடை தொடர்கிறது.


அனைத்து வழி பாட்டிடங்களும்   மூடப்பட்டு இருக்கும். மதக்கூட்டங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.


கட்டுப்பாட்டு மண்ட லங்கள் தவிர்த்து பிற இடங் களுக்கான கட்டுப்பாடுகளு டனான அனுமதி விவரம் வருமாறு:-


மாநிலங்கள் இடையே ஒத்த சம்மதத்துடன் பய ணிகள் வாகனம், பேருந்து போக்குவரத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது.


சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களை சம்பந்தப் பட்ட மாநிலங்களும், யூனி யன் பிரதேசங்களும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வரைமுறைகளுக்கு ஏற்ப இனி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.


சிவப்பு, ஆரஞ்சு, கட்டுப் பாட்டு மண்டலங்களுக்குள் எல்லை நிர்ணயிப்பதை மாவட்ட நிர்வாகங்களே மேற்கொள்ளலாம்.


கட்டுப்பாட்டு மண்டலங் களுக்குள் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் உள்ளேயும், வெளியேயும் மருத்துவ காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் சென்றுவர அனுமதி கிடையாது.


கட்டுப்பாட்டு மண்டலத் துக்குள் தீவிரமாக தடம் அறிதல், வீடுகள் தோறும் கண்காணிப்பு நடைபெறு வதுடன் தேவையான பிற தலையீடுகள் அனுமதிக்கப் படுகிறது.


இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.


65 வயதுக்கு மேற்பட்ட வர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அவர்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய, மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்ல லாம்.


பொது இடங்களில், பணியிடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.


பொது இடங்களில், வேலைபார்க்கும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.


எல்லா இடங்களிலும், போக்குவரத்து சாதனங்க ளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.


இறுதிச் நிகழ்வுகளில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். அதிக பட்சம் 20 பேர் கலந்து கொள்ளலாம்.


பொது இடங்களில் மது பானங்கள் அருந்தக்கூடாது. புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.


கடைகளில் வாடிக்கையா ளர்கள் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண் டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கடைகளில் அனுமதி இல்லை.


முடிந்த வரையில் வீட்டில் இருந்து பணி செய்வது தொடரப்பட வேண்டும். பொது இடங்களில் கண்டிப் பாக வெப்ப பரிசோதனை, கை கழுவுதல், கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்தல் பின்பற்றப்பட வேண்டும்.


பணி இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment