ஊரடங்கு முடிந்ததும் 15 நாட்கள் வகுப்புகளுக்கு பின்னே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்: திராவிட மாணவர் கழகம் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

ஊரடங்கு முடிந்ததும் 15 நாட்கள் வகுப்புகளுக்கு பின்னே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்: திராவிட மாணவர் கழகம் தீர்மானம்

"10-ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, ஊரடங்கு முற்றிலும் விலக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், குறைந்தது 15 நாட்களாவது மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி, அதற்குப் பிறகே தேர்வுகளை நடத்த வேண்டும். இதனை தெளிவாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். மத்திய பாடத்திட்ட மாணவர் களுக்கு 10 நாட்கள் வகுப்புக்குப் பின்னரே தேர்வு என்று அப்பாடத்திட்ட வாரியம் அறிவித்துள்ள தையும் கவனத்தில் கொண்டு மாநில அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்."


என்று மே 3ஆம் தேதியன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற மாநில திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment