முனைவர் பேராசிரியர்
ந.க. மங்கள முருகேசன்
திராவிட இயக்க வரலாற்றில் பல்வேறு நாட்களுக் குத் முதன்மை உண்டு. அவை தந்தை பெரியார் பிறந்த நாள், மறைந்த நாள், அன்னை நாகம்மையார் நினைவு நாள், அன்னை மணியம்மையார் பிறந்த நாள், மறைந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், மறைந்த நாள், அவரின் அன்புத் தம்பி கலைஞர் பிறந்த நாள், மறைந்த நாள், தமிழர் தலைவர் பிறந்த நாள் - இவையெல்லாம் தனி மனிதர்களான தலைவர்களின் வாழ்வோடு தொடர்புடையவை.
இயக்கம் என்னும்போது நீதிக்கட்சி தோன்றிய நாள், திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றம் பெற்ற நாள், தி.மு.க. பிறந்த நாள் என்று குறிப்பிடுவோம்.
ஆயினும் இயக்க வரலாற்றில் தந்தை பெரியார் ஜாதியை ஒழிக்க வேண்டி இந்திய அரசமைப்புச் சட்ட நகல் எரிப்பு நாள் நவம்பர் 26 - எந்தச் சுயமரியாதை உணர்வு உள்ளவனும் மறக்கவே முடியாத - 4000 பேரைச் சிறைக்கனுப்பி 18 பேரைப் பலி கொடுத்த நாள்!
அந்த வரிசையில் உலகமே வியந்த போராட்டம் "தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு". அதற்கு நாள் குறித்த நாள் மே 15. இந்த நாளை இன்றைய இளைஞர் சமூகம் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த வரலாற்றுப் பதிவை இங்கே எடுத்து வைக்கிறேன். இதன் தொடக்கம் மன்னார்குடி. இப்போது, பிரிவினையைத் திராவிட இயக்கம் வலியுறுத்தவில்லை என்றாலும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஆட்சியில் தொடர்ந்து தமிழகம் புறக்கணிப்பட்டு, பொருளாதார அடிப்படையில் நசுக்கப்படும் வேளை யில் தந்தை பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு போராட் டமும், இந்திய தேசப்பட எரிப்பும் நினைக்கப்பட வேண்டிவை.
1958ஆம் ஆண்டு - இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் ஜுலை 5ஆம் தேதி அனைத்து வகையிலும் புதுமையான மன்னார்குடி மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களுக்குச் சுதந்திரம் வேண்டும், டில்லி ஆதிக்கத்தின் கீழ் இனித் தமிழர்கள் அடி மைப்பட்டுக் கிடக்க மாட்டார்கள் என்பதை எடுத்துக் காட்டவே மாநாட்டிற்கு "சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு" என்று பெயர் சூட்டியிருந்தார் தந்தை பெரியார்.
மன்னார்குடி மாநாட்டின் தலைவராக சி.பா.ஆதித்தனாரை முன்மொழிந்தார்.
இம்மாநாட்டில் தமிழ் மக்களின் வறுமைக்கும், கீழான நிலைக்கும் காரணம் அடிமை வாழ்வுதான் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கிய தீர்மானம் அம்மாநாட்டில் ஒரு மனதாய் ஆர்ப்பரிப்புடன், ஆர வாரத்துடன் நிறைவேறியது.
1960 ஜூன் 5ஆம் நாள் நடைபெற்ற இந்திய நாட்டுப் பட எரிப்பு போருக்கு வித்து - டில்லி ஆட்சி தமிழ்நாட்டை ஒரு காலனி நாடாகக் கருதித் தமிழ் நாட்டின் செல்வத்தைப் பறித்துக் கொண்டு போகிறது. டில்லி ஆட்சி ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்து அதில் உதவி என்ற பெயரால் தமிழ்நாட்டுக்குத் திருப்பித் தருவது ரூ. 6 கோடிதான்.
(அதை அப்படியே இன்று மோடி தமிழகத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி.யைத் தராத மோசடியையும், ஆயிரம் கோடி கரோனா நிதி கேட்டால் 100 கோடி தருவதையும் ஒப்பிடுங்கள்!)
கி அரசாங்க வங்கி, ஆயுள் இன்சூரன்ஸ், ரயில்வே, அஞ்சல் துறை, அரசாங்கம் நடத்தும் வணிக நிறு வனங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டில் இருந்து கிடைக் கும் லாபத்திலும் தமிழ்நாட்டிற்குத் பங்கு தராமல் டில்லி ஆட்சியே விழுங்குகின்றது.
கி பொருளாதாரத் துறையில் தமிழ் மக்கள் மேம்பாட்டை அடையவும், உலகில் தமிழ்நாட்டுக்குப் பண்டைய பெருமையையும், புகழையும் மீட்கவும், தமிழ் ஓசை உலகெல்லாம் கேட்கவும், தமிழர்கள் சுதந்திர மக்களாக வாழவும் தமிழர்கள் வறுமை நீங்கி வாழ்க்கைத் தரத்தில் உயரவும், தமிழ்நாடு டில்லியின் பிடிப்பில் இருந்து விடுபட்டுச் சுதந்திரம் அடைவது இன்றியமையாதது என்று இம்மாநாடு கருதுகிறது.
தமிழ் மக்களுக்குத் தமிழ் இனம், தமிழ்நாடு என்ற பற்றுப்படச் செய்யும் சுதந்திர உணர்ச்சியை வளர்க்க வும், தமிழ்நாட்டைக் குறிக்கும் பகுதி நீக்கப்பட்ட பிற பகுதிகள் கொண்ட இந்தியா தேசப்படத்தை எரிப்பது என்று இம்மாநாடு முடிவு செய்வதுடன், இப்போராட் டத்தில் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மக்களும் பங்கு கொள்ள வேண்டுமென்று இம்மாநாடு தமிழ் மக்களை அழைக்கிறது.
இம்மாநாட்டுக்கான தேதியை திரு ஆதித்தனார் அவர்களும், பெரியார் அவர்களும் கலந்து அறிவிக்க வேண்டுமெனக் கேட்கிறது.
மன்னார்குடி மாநாடு நடைபெற்று முடிந்ததும் அதே போலத் தமிழகத்தில் பல பகுதிகளிலும் சுதந்திரத் தமிழ்நாடு மாநாடுகள் நடைபெற்றன.
தமிழர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் செய்தி தமிழ் மக்களுக்குக் கிடைத்த நாள் 1960 மே 15! அந்த நாளில் தந்தை பெரியாரும், ஆதித்தனாரும் கலந்து ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்று நாள் குறித்தனர், அறிவிப்பு வெளியிட்டனர்.
சும்மா இருக்குமா அரசு? இந்தப் போராட்டம் பைத்தியக்காரத் தனமானது என்றார் அமைச்சர் பக்த வத்சலம். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்திற்குத் தடை.
தந்தை பெரியார் தலைமையில், ஆதித்தனார் தலைமையில் பட எரிப்பு நடைபெறும் என அறிவிப்பு. காலை 10.30 மணிக்கு ஆதித்தனார் கைது. 10.45 மணிக்குத் தந்தை பெரியார் கைது.
எந்த ஊரிலும் போராட்டம் நடைபெறாமல் இல்லை. தலைவர்கள் கைதான பின்னும் பட எரிப்பு நடை பெற்றது. அது மட்டுமல்ல, தேசப்படத்தை எரித்துக் குவியல் குவியலாகச் சாம்பலை நேருவிற்கு அனுப்பி யும் வைத்தனர்.
அந்த வரலாற்று நிகழ்விற்கு அடிகோலிய நாள் - இந்த நாள் - அந்த நாள் மே 15.
No comments:
Post a Comment