படித்ததில் பிடித்தது... மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் காணொலி சிறப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 15, 2020

படித்ததில் பிடித்தது... மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் காணொலி சிறப்புக்கூட்டம்


மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக ‘படித்ததில் பிடித்தது, பிடித்ததில் இரசித் தது” என்னும் தலைப்பில் காணொலி வழியாக சிறப்புக்கூட்டம் 25.4.2020 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.


திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தொடங்கிவைத்தார். தொழில் நுட்ப ஏற்பாடுகளை பீபிகுளம் சுரேசு செய்திருந்தார்.  உரை யாற்றுபவர்களை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனை வர் வா.நேரு ஒருங்கிணைத்தார்.


வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி ஒன்று :


தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுதி ஒன்று நூலி னைக் குறித்து மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.


அவர் தனது உரையில் “இந்தக் கரோனா காலத்தில் ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைக ளைப் படிப்பது வாழ்க்கையை இன்னும் ஆழமா கப் புரிந்து கொள்ளவும், மற்றவர்களிடம் அன்பு செலுத்தவும் பயன்படுகிறது. எனக்கு வாழ்வியல் சிந்தனைப்புத்தகங்கள் மிகவும் பிடித்தவை.முதல் தொகுப்பில் உள்ள சில கட்டுரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பேசுகின்றேன், நேரத்தின் அருமை கருதி“ எனக்குறிப்பிட்டு நல்ல பண்பட்ட நிலத்தையும்,மூளையையும் ஒப்பிட்டு நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளையும் புரட்சிக் கவிஞர், திருக்குறள் கருத்துகள் எப்படி ஆசிரிய ரால் தொகுதி முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக் கிறது என்பதைக் குறிப்பிட்டார். ஏப்ரல் மாதம் என்றால் புரட்சிக்கவிஞர், அண்ணல் அம்பேத்கர் மாதம், அந்த வகையில் வாழ்வியலுக்குள் புரட் சிக் கவிஞரை இணைத்து நூலாசிரியரின் கட்டு ரைகள் இருக்கின்றன எனக்குறிப்பிட்டார்.


எந்த சூழ்நிலையையும் மனிதர்களால் சமாளிக்க முடியும் மன உறுதி மட்டும் இருந்தால் எனக் குறிப்பிட்டு, கடும் குளிர்காலத்தில் தேவை யான உடை அணிந்து பனிக்கட்டியில் சறுக்கு விளையாடுவதை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எந்த சூழலையும் நம்மால் சமாளிக்கமுடியும், பயன்படுத்தமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் வழி காட்டுதலில் இந்தக் கரோனா காலத்தில் இப்படி நூல்களைப் பற்றி காணொலி வழியாகப் பேசுவது என்றார்.


எந்த நிலையிலும் வேதனையடையத் தேவையில்லை, மாறாக அதனை வாய்ப்பாகப் பயன்படுத் துவது எப்படி என்பதனை வாழ்வியல் சிந்தனை கள் மூலமாகத் தெரிந்துகொள்ளமுடியும் என்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்ப்பதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது பற்றியும், படிக்கும் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டியது என்பது பற்றியும் நடைமுறை எடுத்துக்காட்டுகளோடு தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிடுகின்றார் என் பதனை சுப.முருகானந்தம் அவர்கள் குறிப்பிட்டு உரையை நிறைவு செய்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னுரையில் கொடுத்திருக்கும் செய்திகளைக் குறிப் பிட்டு தான் படித்து இரசித்த பகுதிகளை தோழர் களோடு உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டார்.


மாபெரும் தமிழ்க்கனவு:


தொடர்ந்து தி இந்து தமிழ் பத்திரிக்கையின் வெளி யீடான ‘மாபெரும் தமிழ்க்கனவு ‘என்னும் புத்தகம் பற்றி திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் அவர்கள் உரையாற் றினார். அவர் தனது உரையில் இந்தப் புத்தகத்தைப் பல நாட்களாக படித்துக்கொண்டிருப்பதாகக் குறிப் பிட்டார். "தமிழ் வெல்லும்,;நாடு என்பது பூகோளப் படம் அல்ல, வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு;நாடு வாழ நம்முடைய உழைப்பும் தேவை என்ற உணர்வு எல்லோருக்கும் வேண் டும்" என்று அண்ணா அவர்களின் கையெழுத்தில் பொறிக்கப்பட்ட பொன்மொழிகளோடு இந்தப்புத் தகம் தொடங்குகிறது.


மொத்தம் 800 பக்கங்கள் உள்ள புத்தகம். அண்ணா வைப்பற்றிய அரிய செய்திகள், புகைப் படங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். கசங்கிய வேட்டி என்று ஆரம்பித்து அண்ணாவின் எளி மையான தோற்றம் சொல்லப்படுகிறது. முதலில் அண்ணா வாசிக்கிறார். வாசிப்பின் தூண்டுதலால் எழுதுகிறார். எழுத்தின் தூண்டுதலால் பேசுகிறார்.


தொடக்கம் வாசிப்பு என்பதனைக் குறிப்பிடு கின்றார்கள். சிறையில் இருந்தபோதும் தானே நெய்த பனியனைப் போட்டிருக்கின்றார். 11-ஆம் வகுப்பு படிக்கும்போது தேர்வு அறையிலேயே மூக்குப்பொடியைப் பயன்படுத்தியிருக்கிறார். 22 வயதில் வைதீக அடிப்படையில் திருமணம். திருமணம் முடித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாத்திக இயக்கத்திற்குள் வருகின்றார். வந்த நாள் முதல் வாழ்வின் இறுதி நாள்வரை நாத்திகராக வாழ்ந்து அண்ணா மறைந் திருக்கின்றார்.


அண்ணா 3-ஆம் வகுப்பு படிக்கும்போதே ஆங் கிலத்தில் பேசியிருக்கின்றார். சட்டப்படிப்பு படிக்கக் கல்லூரியில் இணைந்து பணம் இல்லாத தால் தொடரமுடியாமல் விட்டிருக்கின்றார். ஆனால் எப்போதும் சட்ட ஞானம் உள்ளவராக இருந்திருக்கின்றார். தந்தை பெரியாரோடு சந்திப்பு, நீதிக்கட்சி, திராவிடர் கழகம், பின்பு தி.மு.க. தான் இருந்த இயக்கங்களில் எல்லாம் தலைமைப் பொறுப்புகளில் அண்ணா இருந்திருக்கின்றார். மாற்றார்களாக இருந்தவர்களை தன் பக்கம் மாற்றுவதில் வல்லவர் அண்ணா. எடுத்துக்காட்டாக என்.வி.என்.நடராசன். காங்கிரசு இயக்கத்தில் இருந்து கடுமையாக விமர்சனர் செய்தவர் அண் ணாவின் அணுகுமுறையால் அண்ணாவோடு இணைகிறார். பின்பு அய்ம்பெரும் தலைவர்களில் ஒருவராகிறார்.


ஈரோட்டில் தந்தை பெரியாரோடு குருகுல வாசம். அண்ணா எழுதிய கட்டுரைக்காக 3-வது மாடியில் இருக்கும் அண்ணாவை நேரில் பார்த்து தந்தை பெரியார் பாராட்டுகின்றார். ஏன், கூப் பிட்டால் நானே வந்திருப்பேனே என்று அண்ணா சொல்ல, பாராட்டுவதை உடனே பாராட்ட வேண்டும் என்பதற்காக 3 மாடி படி ஏறி வந்ததை பெரியார் குறிப்பிட்டிருக்கின்றார். இப்படி பல அரிய செய்திகள் இந்தப்புத்தகத்தில்.


திரு.வி.க. அண்ணாவின் பேச்சைக் கேட்டு வியத்தல். தமிழ் இனிச் சாகாது,'அண்ணாவின் தமிழ் ' இனித் தமிழ் நாட்டில் தலைத்தோங்கும் என்று குறிப்பிட்டது. ஈ.வி.கே. சம்பத் உண்ணா நிலைப் போராட்டத்தில் இருந்தபோது 'தம்பி சம்பத் பசி தாங்க மாட்டாய் 'என்று சொல்லி நேரில் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தது போன்ற பல்வேறு செய்திகள், அதனைப்போல வரலாற்று முக்கியத்துவம் மிக்க அழகிய படங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. படிக்கவேண்டிய புத்தகம். பாதுகாக்க வேண்டிய புத்தகம் என்று குறிப்பிட்டு இந்தப் புத்தகத்தை மணிக்கணக்கில் பேச முடியும், பேசலாம்,ஆனால் நேரத்தின் அருமை கருதி முடித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.


பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்:


பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள 'பெரியாரின் இடதுசாரித்தமிழ்த் தேசியம் 'என்னும் புத்தகம் பற்றி திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் துணைத்தலைவர் நா.கணேசன் உரை யாற்றினார். தனது உரையில் இந்தப்புத்தகம் 2005இல் வெளிவந்தது.


இது 5 அத்தியாயங்களைக் கொண்டது.


1) தேசிய இனச்சிக்கலும் தமிழ்த்தேசியமும்


2) தமிழ்த்தேசியமும் திராவிடமும்


3) தமிழரசுக்கழகமும் திராவிடமும்


4) பெரியாரின் இடது சாரித்தமிழ்த்தேசியம்


5) தமிழ்த்தேசியம் இன்றைய நிலை


என்று குறிப்பிட்டு ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கிப் பேசினார். தமிழர சுக்கழகம் என்ற பெயரில் இயக்கம் நடத்திய ம.பொ.சிவஞானம் அவர்களைப் புரிந்து கொண்டால் இன்றைய தமிழ் தேசியவாதிகளை எளிமையாகப் புரிந்து கொள்ள இயலும்.தமிழ் தேசியம் தனது நோக்கம் என்று சொல்லிவிட்டு முழுக்க முழுக்க ஆரியர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்தியவர் ம.பொ.சி. என்பதையும் கடைசியில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த வுடன் அதனால் பலன் பெற்றவர் என்பதையும் பல்வேறு எடுத்துக்காட்டுகளொடு நூலாசிரியர் நிறுவுவதை விளக்கினார்.


திருக்குறள் தமிழர்களிடையே பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் என்ப தையும் தமிழிசை தமிழகத்தில் நிலை நிற்க கார ணம் திராவிட இயக்கம் என்பதையும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுவுடமைக்கும் பொது வுரிமைக்கும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்பதையும் குறிப் பிட்டார்.


மிக விரிவாக தேசியம்,திராவிடம்,தமிழ் தேசி யம், இடதுசாரி போன்ற சொற்களைப் புரிந்து கொள்ளும் விதமாக வழக்குரைஞர் நா.கணேசன் அவர்களின் உரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.


'படித்ததில் பிடித்தது, பிடித்ததில் இரசித்தது நிகழ்வில் உரைகள் முடிந்தவுடன் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி செயலாளர் சித்தார்த்தன், திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகச் செயலா ளர் இராஜேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டுடியோ சரவணன் கருத்துகளைத் தெரிவித் தனர்.


நிகழ்வில் இராஜபாளையம் சிவக்குமார், விருதுநகர் நல்லதம்பி. போடி இரகுநாகநாதன், பேபி சாந்தா, விரகனூர் கணேசன், விடுதலை செல்வம், மதுரை எல்.அய்.சி. கிருட்டினன் உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டு படித்ததில் பிடித் ததை இரசித்தனர்.


No comments:

Post a Comment