கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எச்சரிக்கை
திருத்துறைப்பூண்டி, மே. 18- திராவிடர் கழக திருத் துறைப்பூண்டி மாவட்ட காணொலி கலந்துறவாடல் கூட்டம் 28.4.2020 அன்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மதன் வரவேற்புரையாற் றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் கி.முருகய்யன், மாவட்ட செய லாளர் சு.கிருட்டினமூர்த்தி, மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், திருவாரூர் மண்டலத் தலைவர் ஓவியர் சங்கர், மண் டல செயலாளர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பணித் துள்ள 21 கட்டளைகளை செயல்படுத்தி வருவதாகவும், தோழர்களிடம் கைப்பேசியில் அவ்வப்போது பேசி வருவதாகவும் கூறினர்.
கழகத்துணைத் தலைவர் உரை:
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பேசும் போது, கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கலாம், ஆனால், பெரியார் சிந்தனை அடங் காது என்பதற்கு அடையாளமாக காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் மற்றும் கழக வழக்குரைஞரணி உள்ளிட்ட 4 கூட்டங்களில் காணொலி வாயிலாகப் பேசி, அவர்களுக்கு உற்சாக மூட்டி வருகிறார்.
இந்நிலையில், நமது தோழர்கள் பல மாவட்டங் களில் கலந்துறவாடல் கூட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்த நேரத்தில், வாழ்வியல் முறைகளை நாம் சிக்கனமாக கையாள வேண்டும். தேவைக்கு செலவு செய்வதே சிக்கனமாகும்.
நியாயமாக பார்த்தால் மத்திய அரசு கரோனாவை கட்டுப்படுத்த தவறியிருக்கிறது. இன்றைய கேடுபா டான சூழலுக்கு மத்திய அரசே காரணமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சீனாவில் கரோனா பெருந்தொற்று பரவியது. உலக சுகாதார நிறுவனம் ஜனவரி 18 ஆம் தேதி கரோனா பெருந்தொற்று உலகை பாதிக்கும் என அறிவித்தது.
ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் மாநிலமாக கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் அம்மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் பிப்ரவரி 7 ஆம் தேதி எல்லைகளை மூடின. ராகுல் காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி இந்திய எல்லைகளை மூட வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை கேலி செய்தது மத்திய அரசு. அவர்கள் முழு எண்ணமும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை அமைப்பதிலேயே இருந்தது. அதன்பிறகே கரோனா பற்றி மத்திய அரசு வாய் திறந்தது. அதன்பிறகு அவசரமாக ஊரடங்கு எனும் ஆபத்தான போக்கை உருவாக்கியது என்றார்.
இவற்றையெல்லாம் மறைக்கவும், மக்களை திசைத்திருப்பவும் மத்திய அரசு முயன்று வருகிறது. அதன் தொடக்கமே தொலைக்காட்சி ஊடகங்களில், இராமாயணம், மகாபாரதம் மற்றும் கிருஷ்ணா போன்ற நாடகங்களை ஒளிபரப்பி மக்களிடையே இந்துத்துவா எண்ணத்தை விதைத்து வருகிறது. இது ஆபத்தான போக்கில் முடியும் என்றார்.
இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் மீள ஆசிரியர் வழிகாட்டுதல்களை படிக்க வேண்டும். நம் இயக் கத்தைப் பொறுத்தளவில் பிரச்சாரம், போராட்டம் என்பது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றதாகும். நாம் அரசியல் பக்கம் செல்லாமல், அரசியலில் யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம்.
கரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் மாவட் டத் தோழர்கள் தனி பயிற்சி வகுப்புகளை நடத்திக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்களை இணைக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பேசியதா வது: கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றும் போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி 23 மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது திருத்துறைப்பூண்டி மாவட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது.
தந்தை பெரியார் ‘இனி வரும் உலகம்’ எனும் நூலில், கம்பி இல்லாத தொலைபேசிகள் வரும், குழாய்கள் மூலம் குழந்தை பிறக்கும், ஒருவர் முகத்தை வேரிடத்திலிருந்து மற்றவர் பார்த்து பேசும் கருவிகள் வரும் எனக்கூறினார். இவை தற்போது நடைபெற்று வருகிறது. தந்தை பெரியாரின் உயரிய கருத்துகளைப் போற்றும் வகையில், யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியார் புத்துலகின் தொலைநோக்காளர் என பாராட்டு வழங்கி சிறப்பித்தது. அவை எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்தது என்பதை உலகுக்கு காட்டும் வகையில் இந்த காணொலிக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
இக்கட்டான இந்த காலகட்டத்தில் கூட ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் விடுதலை நாளேடு தொடர்ந்து இயங்கி வருகிறது. விடுதலை நாளிதழ் வரவில்லை என்றால் நம் நிலை என்னவாகும். விடுதலையே நம்மையும் ஆசிரியரையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக உள்ளது. விடுதலை வரும் செய்திகளால் நாம் புத்துணர்ச்சி அடைகிறோம். இவ்வாறு வாட்ஸ்அப்பில் வரும் விடுதலை நாளிதழை படித்து 500 பேருக்கு மேல் பகிர்ந்து வருவதாகக் கூறினார்.
கழகத் தோழர்களோடு கைப்பேசியில் பேசிவருவ தாகத் தெரிவித்த அவர், மாவட்டத்திலுள்ள தோழர் களோடும், உறவினர்களோடும் தொடர்பில் இருக்க வேண்டும். இயக்கப் புத்தகங்களைப் படித்துவிட்டு, படித்ததில் பிடித்தது என்பதை விடுதலைக்கு அனுப்ப வேண்டும் எனவும், உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50 சதவீதம் கழிவில் தலைமைக் கழகத்தால் வழங்கப் படுகிறது. அதற்கு உடனடியாக பதிவு செய்ய வேண் டும் எனத் தெரிவித்தார். மேலும், கோயில்கள் முதலிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதையும், கோயில்களுக்குச் செல்லாமலேயே மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன்மூலம் தந்தை பெரியாரின் கொள்கை நிலைநாட்டப்பட் டுள்ளது. இதேபோல், திருமணத்தில் 50பேருக்கு மேல் கூடுவதைக் கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றார் பெரியார். ஆனால், இன்று அரசாங்கமோ 20பேர் தான் கூட வேண்டும் எனவும், அதற்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இதன்மூலம் பெரியாரின் கருத்துதான் நிலையானது என்பது நிரூபணமாகியுள்ளது எனத்தெரிவித்தார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந் திரையன் பேசும்போது, கழக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழர் தலை வர் அறிவித்ததன் அடிப்படையில், விருத்தாசலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தாம்பரம், வடசென்னை, தென்சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞரணியினர் கழகத் தோழர்களோடு இணைந்து வழலைக்கட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்றும், ஏழை எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை தோழர்கள் இணைந்து செய்ய வேண்டும் எனவும், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த 21 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் எனப்பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் புக ழேந்தி, திருத்துறைப்பூண்டி நகர தலைவர் தி.குண சேகரன், ஒன்றியத் தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றியச் செயலாளர் இரா.அறிவழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ்முரளி, மாவட்ட மகளிரணி தலைவர் சி.கலைவாணி, கலப்பால் சம்பத், மாதவன் டெல்டா, வேதை ராமச்சந்திரன், வி.சி.வில்வம்,
அ.ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment