தமிழர் தலைவரின் கட்டளையை செயல்படுத்துவோம் கழகத்தில் புதிய வரவுகளை அதிகப்படுத்துவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

தமிழர் தலைவரின் கட்டளையை செயல்படுத்துவோம் கழகத்தில் புதிய வரவுகளை அதிகப்படுத்துவோம்!

விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி கழக மாவட்ட காணொலி கலந்துறவாடல் கூட்ட முடிவுகள்!



திண்டிவனம், மே 18 விழுப்புரம், திண்டி வனம், கல்லக்குறிச்சி கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் காணொலி காட்சி வழியே கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு மண்டல தலைவர் கா.மு. தாஸ் தலைமையில் 17.5.2020 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடந்தது. மண்டல கழக மாணவர் கழக செயலாளர் தம்பி பிரபாகரன் நிகழ்வை ஒருங் கிணைத்தார். மாவட்டக் கழக நிர்வாகிகள்


ம. சுப்பராயன், ப. சுப்பராயன், கே. பரந்தாமன், கோ.சா. பாஸ்கர், சேந்தநாடு பரணீதரன், மண்டல செயலாளர் குழ. செல்வராசு முன்னிலை வகித்தனர்.


கரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே தனி மனித இடைவெளியை பயன்படுத்தி முடங்கி இருக்கக் கூடிய நிலையிலும் கழகப் பணிகளை செய்திடுவது எப்படி என்பதாக கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்திருந்த 21 செயல்பாடுகளை முழு மூச்சாக நிறைவேற்றுவது குறித்தும், கழகக் கிளைகளை புதிதாக ஏற்படுத்துவது, புதிய வரவுகளை இயக்கத்தின் பால் ஈர்த்திடுவது, சேர்த்திடுவது எப்படி என்பது குறித்தும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் வழிகாட்டுதல் உரை வழங்கினார்கள். அதனையொட்டி கழக நிர்வாகிகள் பலரும் கருத்துரையாற்றினர். கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபாஜோசப், மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, மண்டல இளைஞரணி செயலாளர்  இளம் பரிதி, திண்டிவனம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோ. பாபு, நகர கழக செயலாளர் வில்லவன் கோதை, இளைஞரணி அமைப் பாளர் செந்தில், விழுப்புரம் நகர செயலாளர் சதீஷ்,  மகளிர் பாசறை கீதா, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.  பழனி வேல், மாவட்ட ப.க. தலைவர் ரகுநாதன், ச. ஜனார்த்தனம், பெரியார் படிப்பகம் ராசன், கழக மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் கோ.சா. குமார், கல்லை நகர தலைவர் சுந்தரராசன்,  நெடுமாறன், வடலூர் கழக செயலாளர் இரா. குணசேகரன், ஒன்றிய தலைவர் உ. பச்சைப்பன் ஆகியோர் கருத் துரையாற்றி கழகத்  தலைவரின் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுப்போம் என்று உறுதி அளித்தனர்.


No comments:

Post a Comment